இலுப்பக்கோரையில் எள் சாகுபடி

மேலாண்மை பயிற்சிபாபநாசம், ஆக.13:  பாபநாசம் அருகே இலுப்பக்கோரையில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறு துணை சீரமைப்பு திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை எள் பயிருக்கான பயிற்சி நடந்தது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயபிரபா வரவேற்றார். பாபநாசம் வேளாண் உதவி இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். எள் பயிருக்கான பயிரிடுதல் முறை, ரகங்கள் தேர்ந்தெடுத்தல் மற்றும் பல்வேறு தொழிற்நுட்பங்கள் பற்றி ஓய்வு இணை இயக்குநர் கலியமூர்த்தி பேசினார். உழவன் செயலியின் சிறப்பம்சங்கள் தரவிறக்கம் செய்து காட்டி விளக்கம்  அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் அலெக்சாண்டர், உதவி தொழில்நுட்ப மேலாளர் தனசேகரன் செய்திருந்தனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் வேதநாராயணன் நன்றி கூறினார்.

Related Stories: