டெங்கு விழிப்புணர்வு முகாம்

பழநி, ஆக.13: தாராபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு இணைந்து கல்லூரி வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தினர். கல்லூரியின் முதல்வர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தாராபுரம் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப்பிரிவு டாக்டர் கனியன் டெங்கு பரவும் விதம், தடுக்கும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து எடுத்துரைத்தனர். முகாமில் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முகாமில் கல்லூரியின் துணை முதல்வர் கிருஷ்ணகுமார், முதலாமாண்டு துறைத்தலைவர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செந்தில், சசிரேகா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories: