செய்யாறு அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா–

செய்யாறு, ஆக.9: செய்யாறு அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா– நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, தாய்ப்பால் கொடுப்பது அவசியமா? அவசியம் இல்லையா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. செய்யாறு சுகாதார மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் வி.கோவிந்தன் பட்டிமன்றத்திற்கு நடுவராக இருந்து தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்று தீர்ப்பளித்தார்.

குழந்தைகள் நலமருத்துவர் பாலாஜி, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காததால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், நகர மருத்துவ அலுவலர் சர்மிளா தாய்-சேய் நலன் காக்க செய்ய வேண்டிய முக்கிய நடைமுறைகள் குறித்தும் பேசினர். இதில் முதன்மை மருத்துவ அலுவலர் ஏழுமலை, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரளா, ஹேண்ட் இன் ஹேண்ட் சுகாதார திட்டம் முதன்மை பொதுமேலாளர் பிரின்ஸஸ் பியூலா, முதுநிலை திட்ட மேலாளர் லாசர் வாழ்த்தி பேசினர். முடிவில் உதவி திட்ட மேலாளர் ஆனந்தன் நன்றி கூறினார். விழாவில் 150 தாய்மார்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: