ஊரக வேலைவாய்ப்பு நாட்களை 150 ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பாதிப்பு எப்போது தீரும் என்பது தெரியாத நிலையில், அடுத்து வரும் மாதங்களில் அந்தக் குடும்பங்கள் வேறு வாழ்வாதாரமும் இல்லாமல், ஊரக வேலையும் இல்லாமல் எப்படி வாழ முடியும்? தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த முதல் 6 மாதங்களுக்கு ஒதுக்கப்பட்ட 2580 கோடியில் இதுவரை 62 சதவீதம், அதாவது 1601 கோடி செலவழிக்கப்பட்டு விட்டது. தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் இத்தகைய நிலை ஏற்பட்டதற்கு காரணம் மத்திய அரசு ஒதுக்கும் நிதி பெருமளவில் குறைக்கப்பட்டது தான் காரணம். கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட 389 கோடி மனித நாட்களை விட சற்று கூடுதலாக 400 கோடி மனித வேலை நாட்களை உருவாக்க வேண்டுமானால் கூட, மத்திய அரசு மட்டும் 1,13,500 கோடி ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கினால் மிக மோசமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு 150 நாட்கள் வேலை வழங்கலாம். …

The post ஊரக வேலைவாய்ப்பு நாட்களை 150 ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: