பாஜ பக்கம் சாய்ந்து வரும் சிராக் பஸ்வானை இழுக்க தேஜஸ்வி முயற்சி

பாட்னா: பாஜ பக்கம் சாய்ந்து வரும் லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பஸ்வானை தங்கள் பக்கம் இழுக்க தேஜஸ்வி யாதவ் காய் நகர்த்துகிறார்.  மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான், லோக் ஜனசக்தி கட்சியினை வழிநடத்தி வந்த நிலையில் அவருடைய சித்தப்பாவான (பஸ்வானின் தம்பி) பசுபதி குமார் பராஸ் உள்ளிட்ட சில எம்.பிக்கள் திடீரென சிராக் பஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். கட்சியையும் கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர். இந்த பிரச்னையில் பிரதமர் மோடி தலையிட்டு தனக்கு உதவ  வேண்டும் என சிராக் தெரிவித்துள்ளார். இதன்மூலம், மீண்டும் அவர் பாஜ பக்கம் சாய்வதாக தெரிகிறது.  இந்நிலையில், சிராக்கை தங்கள் பக்கம் வளைக்க ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் காய் நகர்த்தி வருகிறார். அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கூட்டணி கட்சிகளை பயன்படுத்தி கொண்டு, பின்னர் பாஜ கைவிடுவது வழக்கமானது. பஸ்வானின் பிறந்தநாளான ஜூலை 5ம் தேதி தலித் மீட்பாளர் தினமாக கொண்டாடஉள்ளோம்.  ஆர்எஸ்எஸ் சித்தாந்ததுக்கு எதிராக இருந்தவர் ராம் விலாஸ் பஸ்வான். அவரைப் போலவே, சிராக்கும் எங்களின் ஆர்எஸ்எஸ்.எதிர்ப்பு போராட்டத்தில் இணைய வேண்டும்,’’ என்றார். இதன் மூலம், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைய சிராக்குக்கு தேஜஸ்வி மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்….

The post பாஜ பக்கம் சாய்ந்து வரும் சிராக் பஸ்வானை இழுக்க தேஜஸ்வி முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: