ரூ.15 லட்சம் நிதியுதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எவரெஸ்ட் சிகரம் ஏறும் வீராங்கனை நன்றி

சென்னை: ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, எவரெஸ்ட் சிகரம் ஏற உள்ள வீராங்கனை நன்றி தெரிவித்தார். சென்னையைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி 2023ம் ஆண்டு ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் காத்மாண்டுவில் இருந்து புறப்படும் தேர்வு செய்யப்பட்டுள்ள  குழுவினருடன் இணைந்து உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை செய்ய திட்டமிட்டு நேற்று சென்னையிலிருந்து புறப்பட்டு  நேபாளம் சென்றார். எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் பங்கேற்க நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நிதியுதவியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை கடந்த மார்ச் 28ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இந்நிலையில் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு கூடுதல் நிதியுதவி தேவைப்படுவதால் மேலும் நிதியுதவி வழங்கிடுமாறு அமைச்சரிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தார்.

இதனை தொடர்ந்து  தன்னார்வலர்கள் மூலம் கூடுதலாக ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வீராங்கனை முத்தமிழ்ச்செல்வி கூறுகையில், ‘‘எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய   தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண் நான். எனது கனவை நனவாக்கும் வகையில் நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

Related Stories: