பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மூலம் தெற்கு ரயில்வே ரூ.6,345 கோடி வருவாய் ஈட்டி சாதனை: ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: தெற்கு ரயில்வே, பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு  2022-23ம் நிதியாண்டில் ரூ.6,345 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வேவெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு ரயில்வே, 2022-23ம் நிதியாண்டில் பயணிகள் பிரிவை பொறுத்தவரை ரூ.6,345 கோடி வருவாயை ஈட்டி 80% வளர்ச்சி அடைந்துள்ளது. அதுவே இது கடந்த நிதியாண்டில் ரூ.3,539.77 கோடியாக இருந்தது. இதுவரை, 2019-2020 நிதியாண்டில் எட்டப்பட்டதே ரூ.5,225 கோடியே சாதனை அளவாக இருந்துள்ளது. 2022-2023ம் நிதியாண்டில் 88.5% அதிகரித்து 640 மில்லியன் பயணிகள் வருகை தந்துள்ளனர். ரயில்வே வாரியத்தின் இலக்கை தெற்கு ரயில்வே 92% எட்டியுள்ளது.

பல்வேறு ரயில் நிலையங்களில் 239 புதிய தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரத்தை (ஏடிவிஎம்) அறிமுகப்படுத்துதல் மற்றும் யு.டி.எஸ் மொபைல் செயலியின் பல்வேறு அம்சங்களை மேம்படுத்துதல் மற்றும் பயணிகளிடையே அதன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பயணச்சீட்டு சேவைகளில் பயணிகளுக்கு உகந்த முயற்சிகளை தெற்கு ரயில்வே எடுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* சரக்கு பிரிவில் சாதனை

2022-23ம் நிதியாண்டில் 37.94 மில்லியன் டன்களை ஏற்றிச் சென்றுள்ளது. இது, 2.20 மில்லியன் டன்கள் நிர்ணயித்த அளவை விட அதாவது 6% அதிகம். சரக்குப் போக்குவரத்தில் ரூ.3,637.86 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு (2021-22) வருவாயை விட 30%  அதிகம்.

Related Stories: