சென்னை: ஒன்றிய அமைச்சராக உள்ள முருகன், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் சீட் ஷேரிங் பற்றி ஆயிரம் கூறலாம். ஆனால், இறுதி முடிவை அதிமுக தான் எடுக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தென்சென்னை மக்களவை தொகுதி பாஜவிற்கு முக்கியமானது என ஒன்றிய இணைய அமைச்சர் எல்.முருகன் கூறியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது: கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சியும், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை கேட்பது காலம்காலமாக கடைபிடிக்கும் மரபு. அந்தவகையில் அந்த எண்ணங்கள் பாஜவிற்கு வந்து இருக்கலாம். ஆனால், அதிமுகவில் பாஜ அங்கம் வகிக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா தான் தொகுதிகளை உறுதி செய்வார்கள்.
