கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமனை கொன்ற கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை: உத்தரபிரதேச போலீசார் அதிரடி

முசாபர்நகர்: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமனை சுட்டுக் கொன்ற கொள்ளையனை உத்தரபிரதேச போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா உள்ளிட்ட குடும்பத்தார் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நகரில் வசித்து வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு ஆக. 19ம் தேதி  சுரேஷ் ரெய்னாவின் மாமா உள்ளிட்ட குடும்பத்தார் 4 பேரைத் தாக்கி கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். இதில் ரெய்னாவின் மாமா அசோக்குமார் கொல்லப்பட்டார். கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் அசோக் குமாரின் 80 வயது தாய் சத்யா தேவி, மனைவி ஆஷா தேவி, மகன்கள் அபின், கவுஷால் ஆகியோர் படுகாயமடைந்தனர். ஷாபூர் போலீசார் வழக்குபதிந்து கொள்ளை, கொலையாளிகளை தேடி வந்தனர். இதுகுறித்து

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் எஸ்.எஸ்.பி சஞ்சீவ் சுமன் கூறுகையில், ‘அசோக்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ரஷீத் என்பவன் பவாரியா (ெகாள்ளை) கும்பலை சேர்ந்தவன் ஆவான். இவன் மீது பல்வேறு மாநிலங்களில்  வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட 16 கிரிமினல் வழக்குகள் உள்ளன.  முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா கொலை மற்றும் உறவினர்களை தாக்கிய வழக்கில் ரஷீத் தேடப்பட்டு வந்தான்.  சஹாதுடி சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, பைக்கில் வந்த 2 பேரை  நிறுத்தி சோதனையிட முயன்றனர்.

ஆனால் அவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு கரும்பு வயலுக்குள் தப்பி ஓடினர். உஷாரான போலீசார், இருவரையும் நோக்கி ஓடினர். அப்போது நடந்த என்கவுன்டரில், ரஷீத் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது கூட்டாளி தப்பிஓடிவிட்டான். ஷாபூர் போலீஸ் அதிகாரி பப்லு குமாருக்கு காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்து ஒரு பைக், ரிவால்வர், கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ என்றார்.

Related Stories: