மும்பை வந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்

மும்பை: மும்பை வந்த விமானத்தில் குடிபோதையில் விமான பணிப்பெண்ணிடம்  அத்துமீறி நட ந்துகொண்ட ஸ்வீடனை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று முன்தினம் மும்பை நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் ஸ்வீடனை சேர்ந்த ஹரால்ட் ஜோனஸ் என்ற பயணியும் வந்துள்ளார். அப்போது ஜோனஸ் பயணிகளின் அனைவரின்  முன்னிலையிலும் விமானப்பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.  

மும்பை   போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்தேரி நீதிமன்றம் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. டெல்லியில் இருந்து துபாய் நோக்கி சரக்கு விமானம் நேற்று காலை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே  விமானத்தின் மீது பறவை மோதியது. இதனால் டெல்லியில் தரையிறங்கி சோதித்தபின்  விமானம் புறப்பட்டு சென்றது.

Related Stories: