குமாரசாமி கட்சி எம்எல்ஏ பா.ஜவில் இணைந்தார்

பெங்களூரு: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த குமாரசாமி கட்சியை சேர்ந்த ஏ.டி. ராமசாமி பாஜவில் இணைந்தார். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரகலகூடு மஜத எம்எல்ஏ ஏடி ராமசாமி நேற்று முன்தினம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து டெல்லி சென்ற ஏடி ராமசாமி பாஜ கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் அக்கட்சியில் இணைந்தார்.

கட்சியில் இணைந்த ஏடி ராமசாமிக்கு கட்சியின் கொடியை அணிவித்து வரவேற்றார். அதன் பிறகு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூரையும் சந்தித்து ஏடி ராமசாமி அக்கட்சியில் இணைந்தார். பின்னர் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Related Stories: