லண்டன் வீதிகளில் வலம் வரும் நாக சைதன்யா, ஷோபிதா ஜோடி

லண்டன்: நாக சைதன்யா, ஷோபிதா துலிபாலா ஜோடி லண்டன் வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் நாக சைதன்யா. சமந்தாவும் நடிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்திருப்பதாகவும் அவர் பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த ஷோபிதா துலிபாலாவை காதலிப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதை ஷோபிதா மறுத்து வந்தார். நாக சைதன்யாவும் இதை மறுக்கும் விதமாகவே பேசி வந்தார். ஆனால் தற்போது இருவரும் லண்டனில் விடுமுறையை கழித்து வருவது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் லண்டனில் உள்ள ரெஸ்டாரென்ட் ஒன்றுக்கு இவர்கள் சென்றுள்ளனர்.

அங்கிருந்த செஃப் நாக சைதன்யாவுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அதன் பின்னணியில் ஓரமாக ஷோபிதா அமர்ந்திருப்பது புகைப்படத்தில் தெரிகிறது. அதை கண்டுபிடித்த நெட்டிசன்கள், காதல் உண்மைதான் என நாக சைதன்யா, ஷோபிதாவை ட்ரோல் செய்து வருகிறார்கள். அதே சமயம், இந்த புகைப்படத்தை தெரிந்துதான் நாக சைதன்யா தரப்பு வெளியில் கசிய விட்டிருக்கிறது. இதன் மூலம் சமந்தா அப்செட் ஆக வேண்டும் என நாக சைதன்யா விரும்புவதாக சிலர் கூறுகிறார்கள். கடந்த ஆண்டு மயோசிடிஸ் நோயால் சமந்தா பாதிக்கப்பட்டபோது, திரையுலகை சேர்ந்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறினர். ஆனால் நாகசைதன்யா மவுனம் காத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: