மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடி: 2ம் இடம்பிடித்தது

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1.60 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், ‘மார்ச் மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 122 கோடி. இதில் ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.29,546 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.37,314 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.82,907 கோடி. செஸ் வரி ரூ.10,355 கோடி’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட நடப்பாண்டு   13 சதவீதம் அதிக ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரலில் அதிகபட்சமாக ரூ.1.68 லட்சம் கோடி  வசூலானது. அதைத் தொடர்ந்து, மார்ச் மாத வசூல் 2ம் இடத்தை பிடித்துள்ளது.

Related Stories: