8 மாவட்டங்களை பிரிக்க எம்பி, எம்எல்ஏக்கள் கோரிக்கை: முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேச்சு

சட்டசபையில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.ராமச்சந்திரன் (அதிமுக) பேசுகையில், ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய மூன்று கோட்டங்களும், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு, போளூர், கலசப்பாக்கம், ஆரணி, சேத்துப்பட்டு, செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, ஜமுனாமரத்தூர் என மொத்தம் 12 வட்டங்கள் பிரிக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், “சட்டமன்ற உறுப்பினர் கேட்பதை போல 8 மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்று சொல்லி, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எல்லாம் என் மத்தியிலும், முதல்வர் மத்தியிலும் கடிதங்கள் கொடுத்துள்ளனர். அதைபோல, ஆர்டிஓ அலுவலகம், தாலுகாவை எல்லாம் பிரிக்க வேண்டும் என்று கொடுத்துள்ளனர். நிதி நிலைக்கு ஏற்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார். பெரிய மாவட்டங்கள், தமிழ்நாட்டில் நிறைய இருக்கின்றன.

அதையெல்லாம் முதல்வர் கருத்தில் கொண்டு தான் அதன் மீது முடிவு எடுப்பார். இன்றைக்கு இருக்கக்கூடிய நிதி சூழ்நிலையில் அதை எப்படி முடிவு எடுப்பது என்பது முதல்வருடைய பொறுப்பில் இருக்கிறது. ஆனால் சட்டப்படி பிரிப்பதற்கு கூடிய அந்த தகுதி இல்லாமல் திருவண்ணாமலை மாவட்டம் இருக்கிறது’’ என்றார்.

Related Stories: