சிஎம்டிஏ சார்பில் 3வது திட்டத்திற்கு கருத்து கேட்பு: பொதுமக்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில், மூன்றாவது திட்டத்திற்கு பொதுமக்களிடம் கருத்துகேட்கும் முயற்சியினை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முன்னெடுத்துள்ளது. சென்னை பெருநகரின் முதல் முழுமைத் திட்டம் 1976ம் ஆண்டும், இரண்டாம் முழுமைத் திட்டம் 2008ம் ஆண்டும் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், 1189 சதுர கி.மீ பரப்பிலான சென்னை பெருநகரப் பகுதிக்கு மூன்றாம் முழுமைத் திட்டத்தினை (2026-2046) தயாரிக்க உள்ளது.  இத்திட்டம் 2026ம் ஆண்டிலிருந்து செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது.

இத்திட்டம் அலுவலர்கள் அளவில் மட்டுமே திட்டமிடப்பட்ட நிலையில், மூன்றாவது முழுமைத் திட்டத்திற்கு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், திரை அரங்கங்கள், வணிக வளாகங்கள், கல்வி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் நேரடியாகவும், வலைத்தள வாயிலாகவும் கருத்து கணிப்புகளை கேட்கும் முயற்சியினை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முன்னெடுத்துள்ளது.

அதன்படி, தொலைநோக்கு ஆவண தயாரிப்பிற்காக உருவாக்கப்பட்ட பொதுமக்கள் கருத்துக்கேட்பு படிவம், மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை வெளிப்படுத்த உதவுகின்றது. இதன் மூலம் நவீன, முற்போக்கான, உள்ளடக்கிய மற்றும் உலகளாவிய நகரமாக எதிர்கால சென்னையை மாற்றலாம். இந்த தொலைநோக்கு ஆவணத் தயாரிப்பிற்கு உங்களின் கருத்துகள் வரவேற்கப்படுகிறது, கருத்து தெரிவிக்க விரும்புவோர், ஆங்கில படிவத்தினை பூர்த்தி செய்ய: அல்லது தமிழ் படிவத்தினை பூர்த்தி செய்ய : அல்லது www.cmavision.in என்ற இணையதள பக்கத்தில் கருத்துகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: