திமுக ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நடந்தே தீரும்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உறுதி

சென்னை: திமுக ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நடந்தே தீரும் என்று பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார். கால்வாய் வெட்டும் பணிகளுக்காக ரூ.177.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 64% பணிகள் முடிந்துள்ளன. கால்வாய் வெட்டும் பணி வேகமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். 2023-24-ம் ஆண்டில் கால்வாய் வெட்டும் பணிக்காக ரூ.111.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Related Stories: