பெரியார் பல்கலை. ஊழல் தொடர்பாக விசாரணைக்குழு கால நீட்டிப்பு தேவையற்றது: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பெரியார் பல்கலை. ஊழல் தொடர்பாக விசாரணைக்குழு கால நீட்டிப்பு தேவையற்றது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விசாரணை வேகம் குறைவாக நடைபெற்று வருவதால் குற்றவாளிகள் தப்புவதற்கு அரசு அனுமதிக்கக்கூடாது. பெரியார் பல்கலை.யில் நடந்த ஊழல்கள், முறைகேடுகள் பற்றி விசாரணைக்கு அரசு ஆணையிட்டது சிறந்த முன்னெடுப்பு. இயல்பான முடிவை அடைய வேண்டுமென்றால் விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: