பஞ்சாப்: பாட்டியாலா சிறையில் இருந்து இன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து விடுதலை ஆகிறார். மே16 வரை சிறை தண்டனை இருக்கும் நிலையில் நன்னடத்தை காரணமாக 15 நாட்களுக்கு முன்னதாக விடுதலையாகிறார். 34 ஆண்டுக்கு முன் ஒருவரை தாக்கிய வழக்கில் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டதால் சித்து சிறைக்கு சென்றார்.