கஞ்சா விற்ற வாலிபர் கைது

மதுராந்தகம்: மதுராந்தகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பட்டு ஏரிக்கரை பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மதுராந்தகம் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மேல்மா கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் (23) சாத்தமை கிராமத்தை சேர்ந்த ராகேஷ் (19) ஆகிய இருவர் காஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பகுதியில் இருந்த லோகேஷ்சை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில், கைது செய்யப்பட்ட லோகேஷ் மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்றதில் ஆஜர்படுத்தினர். பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், தப்பியோடி தலைமறைவாக இருக்கும் ராகேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: