பராமரிப்பு பணி காரணமாக பெருங்குடி மயானம் மே 14 வரை மூடல்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, பெருங்குடி மயான பூமி, மே 14ம் தேதி வரை மூடப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெருங்குடி மயானபூமியின் எரிவாயு தகன மேடையை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், திரவ பெட்ரோலிய வாயு தகன மேடையாக மாற்றம் செய்யவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (1ம் தேதி) முதல் 14.05.2023 வரை 45 நாட்களுக்கு மேற்கண்ட மயானபூமியில் உடல்களை தகனம் செய்ய இயலாது. எனவே பொதுமக்கள் அருகிலுள்ள அடையாறு மண்டலம், பாரதி நகர், பெசன்ட் நகர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், ஈஞ்சம்பாக்கம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: