ஓராண்டு சிறை தண்டனை சித்து இன்று விடுதலை

பாட்டியாலா: ஓராண்டு சிறை தண்டனை காலத்திற்கு முன்னதாகவே நன்னடத்தை அடிப்படையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சித்து இன்று விடுதலையாகிறார்.  கடந்த  1988ம் ஆண்டு நடந்த சாலை  விபத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட  முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான  சித்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கடந்தாண்டு மே 20ம் தேதி முதல்  பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டு சிறை தண்டனை வரும் மே 16ம்  தேதியுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், கிட்டத்தட்ட 45 நாட்கள் முன்னதாக அவர்  விடுதலையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறைத் துறை  அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாப் சிறைத் துறை விதிகளின்படி, நன்னடத்தை  அடிப்படையில் குறிப்பிட்ட வகை குற்றங்களை செய்த கைதிகளை விடுவிப்பது  வழக்கம். அதன்படி  45 நாட்கள் முன்னதாக சித்து விடுதலை  செய்யப்படுவார். இன்று (ஏப். 1) அவர் சிறையில் இருந்து விடுதலை  செய்யப்படுவார்.  ’ என்றனர். இதை சித்துவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளமும் உறுதி செய்துள்ளது.

Related Stories: