2ம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற ஆணைக்கு கட்டுப்பட்டது: ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: 2ம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற ஆணைக்கு கட்டுப்பட்டது என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் நேர்முகத் தேர்வு முடிவுகளை ஏப்ரல் 11 வரை ஒத்தி வைக்கவும் ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. மனுதாரர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவும், அதன் முடிவுகளை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  தேர்வில் வென்றும் நேர்முக தேர்வுக்கு அழைக்கவில்லை என சுமதி, துர்காசுதா, பிரவீன், பார்த்திபன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். நேர்முக தேர்வு பய்யியலில் பெயர் இல்லாதது பற்றி கேட்டபோது உரிய தகவலை தேவானையும் தரவில்லை என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் 226 மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் (TNPSC) மூலமாக நடைபெற இருந்த நேர்முகத் தேர்வுகளுக்கு  உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்துள்ளது. தேர்வு முறைகளில் குளறுபடிகள் நடைபெற்றிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகியுள்ள மாணவர்களின் சான்றிதழ்கள், மதிப்பெண்கள் குறித்த விவரங்களை மனுதாரர்களுக்கு தேர்வாணையம் தெரியப்படுத்த வேண்டும் என்றும், மறு உத்தரவு வரும் வரை நேர்முகத் தேர்வை நடத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகியுள்ள 226 பேரில், பலர் தகுதியானவர்கள் இல்லை எனக் கூறி நீதிமன்றத்தில் மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்தப் பணிக்கு தகுதி உடையவர்கள் என ஏற்கெனவே தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அதில் தேர்வாகாத நிலையில், மீண்டும் அதே தேர்வு முறையை கடைப்பிடிக்கக் கூடாது என்றும் மனுதாரர்கள் கூறியுள்ளனர். நேர்முக தேர்வுக்கு அனுமதிக்கக்கோரி மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்களை ஏப்.11-க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. 

Related Stories: