அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் வரவேற்பு இல்லாத பாடப்பிரிவுகள் நீக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி

சென்னை: 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டால் 2021-ல் 7,886 பேரும் இவ்வாண்டு 8,771 மாணவர்களும் பயன்பெற்றுள்ளனர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். வரும் கல்வியாண்டில் இருந்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் மொழிப்பாடங்கள் விரிவாக்கப்படும். 68,891 மாணவர்கள் இவ்வாண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டு 1.28 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்த நிலையில் இவ்வாண்டு 1.48 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர் என்று அமைச்சர் கூறினார். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-ல் 4.38 பேர் சேர்ந்த நிலையில் இவ்வாண்டும் 5.33 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் 1.45 லட்ச பேர் 365.11 கோடி சலுகை பெற்றுள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் வரவேற்பு இல்லாத பாடப்பிரிவுகள் நீக்கப்படும். தேவையின் அடிப்படையிலான, வேலைவாய்ப்பு அதிகமுள்ள பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். நான் முதல்வன் திட்டத்தில் கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் பாலிடெக்னிகளில் அறிமுகம் செய்யப்படும்.

நிதி நிலையை பொறுத்து கவுரவ விவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் பொன்முடி பதில் அழைத்துள்ளார்.கவுரவ விரிவுரையாளர்கள் 1,766 பேர் இவ்வாண்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.  10 பொறியியல் கல்லூரிகளில் ஜெர்மன் மாணவர்களுக்கு ஜப்பானிய மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

யாருக்கு தேவையோ அவர்கள் படித்து கொண்டிருக்கிறார்கள் என்றும் மொழிகளை திணிக்க கூடாது என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். முதலமைச்சரின் நடவாடிக்கையால்தான், தஹி என அறிவித்ததை மாற்றி அமைத்திருக்கிறார்கள். மற்ற மொழிகளை கற்பிப்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.  

Related Stories: