மியாமி: அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த கால் இறுதி போட்டியில், 33 வயதான செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, 28 வயதான ரஷ்யாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-4 என கிவிட்டோவா கைப்பற்றிய நிலையில், 2வது செட்டை 6-3 என எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய கிவிட்டோவா 6-3 என கைப்பற்றினார். முடிவில் 6-4,3-6,6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற கிவிட்டோவா அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.