ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!

வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது குற்றச் சாட்டுகளை பதிவு செய்ய மன்ஹாட்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது, ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு 1.30,000 டாலர்கள் செலுத்தியதை மூடி மறைத்த குற்றத் திற்காக மன்ஹாட்டன் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென் நீதிபதிகள் அமர்வின் முன் ஆஜராகி ட்ரம்ப் சார்பில் அந்த பணத்தை வழங்கியதாக சாட்சியம் அளித்தார்.  

கடந்த செவ்வாய்க்கிழமை ட்ரம்ப் கைது செய்யப்படுவார் என கருதப்பட்ட நிலையில், தனது ஆதரவாளர்களை போராட்டம் நடத்த அவர் தூண்டிவிட்டார். தன் மீதான குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் மறுத்து வரும் நிலையில், அவர் மீது குற்றவியல் வழக்கு தொடர நீதிபதிகள் குழு அனுமதி அளித்துள்ளது. குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டால் உடனடியாக அவர் கைது செய்யப்படுவார் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.இதனிடையே வெள்ளை மாளிகை முன்பு கூடிய ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் இது ஒரு நல்ல செய்தி என குறிப்பிட்டுள்ளனர். மெரிக்காவின் முன்னாள் அதிபர் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Related Stories: