மாநகராட்சி தூய்மை பணியில் திடீரென லாரி தீப்பிடித்தது

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் கருணாகரன் (47). இவர், சென்னை மாநகராட்சி சாலையில் தூய்மைப்பணிக்கு பயன்படுத்தும் மண் அள்ளும் லாரியை ஓட்டி வருகிறார். நேற்று நான்காவது மண்டலம், 47வது வார்டு மீனம்பாள் நகர் பகுதியில் சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.  அங்குள்ள மேம்பாலத்தில் சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென லாரியில் இருந்து புகை வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கருணாகரன் லாரியிலிருந்து கீழே இறங்கி உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். லாரி தீப்பிடித்ததை பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். வண்ணாரப்பேட்டையில் இருந்து தீயணைப்பு வண்டிகளில் 5க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

Related Stories: