இன்று முதல் 3ம் தேதி வரை ஈவெரா சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: ஈவெரா சாலையில் நாயர் ேமம்பாலம் சந்திப்பிற்கும் தாசபிரகாஷ் சந்திப்புக்கும் இடையே மழைநீர் வடிகால்வாய் பணி காரணமாக இன்று இரவு முதல் வரும் 3ம் தேதி அதிகாலை வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈவெரா சாலையில் சுதா ஓட்டல் முன்பு (நாயர் ேமம்பாலம் சந்திப்பிற்கும் தாசபிரகாஷ் பாயின்ட் சந்திப்பிற்கும் இடையில் நெடுஞ்சாலை துறையினர் இன்று இரவு 10 மணி முதல் வரும் 3ம் தேதி அதிகாலை 5 மணி வரை பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான அலுவல் மேற்கொள்ள உள்ளதால், கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

* கோயம்பேட்டிலிருந்து ஈவெரா சாலை வழியாக வரும் வாகனங்கள் தாசபிரகாஷ் சந்திப்பிலிருந்து நாயர் மேம்பாலம் சந்திப்பு நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை.

* அத்தகைய வாகனங்கள் ஈவெரா சாலையில் தாசபிரகாஷ் பாயின்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ராஜா அண்ணாமலை சாலை வழியாக சென்று அழகப்பா சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகப்பா சாலை மறுபடியும் வலதுபுறம் திரும்பி நாயர் ேமம்பாலம் சந்திப்பு மற்றும் ஈவெரா சாலை வழியாக செல்லலாம்.

*ஈவெரா சாலையில் நாயர் ேமம்பாலம் சந்திப்பிலிருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி வரும் வாகனங்கள், எந்தவித மாற்றமுமின்றி நேராக செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: