பாபர் மசூதி விவகாரம் ஆக்கிரமிப்பு இடத்தை ஒப்படைக்க உச்ச நீதிமன்றத்தில் அரசு மனு

புதுடெல்லி: பாபர் மசூதி விவகாரத்தில் கட்டுமானத்திற்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடத்தை மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அனுமதி கோரி ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. பாபர் மசூதி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட எந்த தடையும் கிடையாது என கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி தீர்ப்பு வழங்கியது.  இதையடுத்து, ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பாக ராமர் கோயில் கட்டும் பணியானது துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு புதிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘‘ராமர் கோவில் கட்டுமானத்திற்காக ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடங்களில் சுமார் 67 ஏக்கர் இடத்தை மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டும் பணியானது நடந்து வருவதால் மேற்கண்ட நிலத்தை ஒப்படைப்பதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோவில் நிர்வாக குழுவின் நிலங்களும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: