சட்டபேரவையில் க.அன்பழகன்: அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகிய பேசுகையில் நாயன்மார்களால் பாடப்பட்ட திருத்தலமான ஆதிகும்பேஸ்வரர் கோயில் தெற்குகோபுரம் மொட்டை கோபுரமாக உள்ளது. மொட்டை கோபுரத்தை ஏழு நிலை ராஜ கோபுரமாக கட்டுவதற்கு அரசு முன்வருமா. மகாமகம் குளத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான நபர்கள் வருகை தருகிறார்கள். முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் கூடுகிறார்கள். அந்த விழாவை அரசு விழாவாக ஆக்கி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுமா.
அமைச்சர் சேகர்பாபு: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் ஏழு நிலை ராஜகோபுரம் அமைத்திட தொல்லியல் துறையினரை அனுப்பி ஆய்வு செய்து சாத்தியக்கூறுகள் இருக்கின்ற நிலையில் மண்டல குழு, மாநிலக் குழு ஒப்புதல்களோடு ராஜகோபுரம் கட்டுகின்ற பணிக்கு அரசு முயற்சிக்கும். மாசிமகத் திருவிழா என்பது அறிவிக்கப்பட்ட திருவிழாக்கள் பட்டியலில் வரவில்லை. மகாமகத் திருவிழா தான் அப்பட்டியலில் வருகிறது. உள்ளூர் விடுமுறை என்பது மாவட்ட நிர்வாகமும், அரசும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவாகும். ஆகவே துறைக்கு அதில் எந்தவிதமான தடையும் இல்லை.