பருத்தி கொள்முதல் செய்து நூற்பாலைக்கு வழங்க தனி ஆணையம் அமைப்பது குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை: அமைச்சர் காந்தி தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருப்பூர் தெற்கு செல்வராஜ்(திமுக) பேசுகையில், ‘‘பருத்தி கொள்முதல் செய்து நூற்பாலைகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய தனி ஆணையம் அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி பேசுகையில் ‘‘துணி நூல் மீது ஒரு சதவீத செஸ் வரியை உடனடியாக குறைத்தவர் தான் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். சட்டமன்ற உறுப்பினர் வைத்துள்ள கோரிக்கை நல்ல கோரிக்கை.

தற்போது நமது தேவைக்கும் பிற மாநிலங்களில் இருந்து வாங்கி வருவதால், தனி ஆணையம் அமைப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்”,என்றார்.

Related Stories: