நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலுபதில்

சென்னை: சேந்தமங்கலம் தொகுதியில் நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் கடந்த 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி வேளாண்மை துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பொது பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் ஆகிய 2 பட்ஜெட்கள் மீது விவாதம் நடந்தது.

எதிர்க்கட்சி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்நிலையில், சட்டப்பேரவையில் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார். அப்போது பேசிய அமைச்சர், சேந்தமங்கலம் தொகுதியில் நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இந்த ஆண்டே முன்னுரிமை வழங்கி அகலப்படுத்தப்படும் என்று கூறினார்.

ஆவின் பால் அனுப்ப தாமதம்-அதிகாரி சஸ்பெண்ட்: அமைச்சர் நாசர்

சென்னை அம்பத்தூரில் ஆவின் பால் விநியோகம் தாமதமான விவகாரத்தில் 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை விவகாரத்தில் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இயந்திர கோளாறால் அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து சில தடங்களுக்கு பால் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. இயந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் உதவி பொதுமேலாளர் (பொறியியல்) தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். பால் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய நேரத்தில் பால் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நாசர் குறிப்பிட்டார்.

Related Stories: