வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின்நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா வலியுறுத்தல்

சென்னை: வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின் நிலையம் அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா வலியுறுத்தினார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா  பேசுகையில், ‘‘வேளச்சேரிக்கு இன்னொரு துணை மின் நிலையம் வேண்டுமென்று நீண்டகாலமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். தற்போது, வாக்காளர்கள் பட்டியலில் பார்த்தால்கூட சென்னை கோட்டத்தில், வேளச்சேரி தொகுதியில் அதிகமான வாக்காளர்கள் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும். நிறைய டிரான்ஸ்பார்ம்ஸ் மின்மாற்றிகள் வழங்கியிருக்கிறீர்கள். வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின் நிலையம் அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில்,  ‘‘சென்னை மாவட்டத்தில் மட்டும் 25 துணை மின் நிலையங்களை அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கியிருக்கிறார். வேளச்சேரி பகுதியில் ஆய்வு செய்யப்பட்டு, தேவை ஏற்படின், சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

Related Stories: