சில்லி பாயிண்ட்ஸ்

* தென் ஆப்ரிக்க அணியுடன் நடந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஜோகன்னஸ்பர்க், வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 220 ரன் குவித்தது (கிங் 36, பூரன் 41, ரீபர் 27, ரொமாரியோ 44*); தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்தது (டி காக் 21, ஹெண்ட்ரிக்ஸ் 83, ரூஸோ 42, மார்க்ரம் 35*). ஆட்ட நாயகன்: அல்ஜாரி ஜோசப் (5 விக்கெட்), தொடர் நாயகன்: ஜான்சன் சார்லஸ்.

* டி20 போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில், ஆப்கன் சுழல் ரஷித் கான் நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றியுள்ளார். ரஷித் கான் (710), இலங்கையின் வனிந்து ஹசரங்கா (695), பஸல்லா பரூக்கி (692, ஆப்கன்) முதல் 3 இடங்களில் உள்ளனர். பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் சூரியகுமார், ஆல் ரவுண்டர் தரவரிசையில் வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் முதலிடம் வகிக்கின்றனர்.

* நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, ஹாமில்டன் நாளை காலை 6.30க்கு தொடங்குகிறது.

* டெல்லி கேப்பிடல்ஸ் அணியில், காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் ரிஷப் பன்ட்டுக்கு பதிலாக அபிஷேக் போரெல் சேர்க்கப்பட உள்ளார்.

Related Stories: