அனைத்து தொகுதிகளுக்கும் பன்னோக்கு மருத்துவமனையா?

துணை கேள்வி நேரத்தின் போது திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் (திமுக) பேசுகையில், கீழப்புலிவார்டு ரோடு இப்ராகீம் பார்க்கில் அமைந்திருந்த கொடும்பல் என்கிற பிரசவ ஆஸ்பத்திரி ஈ.பி. ரோடு பகுதியில் உள்ள பீரங்கிகுள பகுதிக்கு மாற்றப்பட்ட காரணத்தால் தற்போது அந்த மருத்துவமனை செயல்படாமல் பூட்டப்பட்டுள்ளது. எனவே கொடும்பல் ஆஸ்பத்திரியை அனைத்து வசதிகளையும் கொண்ட ‘மல்டி ஸ்பெஷாலிட்டி’ (பன்னோக்கு ஆஸ்பத்திரி) ஆஸ்பத்திரியாக உருவாக்கி தரப்படுமா? என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சென்னை ஓமந்தூராரில் ‘மல்டி ஸ்பெஷாலிட்டி’ ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. கலைஞர் நினைவு பன்னோக்கு ஆஸ்பத்திரி கிண்டியில் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் 2 இடங்களில் தான் அமைந்துள்ளது. எல்லா உறுப்பினருக்கும் தங்கள் தொகுதியில் பன்னோக்கு ஆஸ்பத்திரி அமைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே தேவைக்கு ஏற்ப மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்’ என்றார்.

Related Stories: