பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

சென்னை: பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு விபத்து மரண உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. புலப்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் உடலை சொந்த ஊர் எடுத்துச் செல்ல நிதியுதவி வழங்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

Related Stories: