இந்திய தூதரகம் மீது தாக்குதல்.. வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என அமெரிக்கா கண்டனம்!!

வாஷிங்டன் : சான் பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப்பில் ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டங்களில் ஈடுபடும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் வெளிநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இங்கிலாந்தை தொடர்ந்து கடந்த ஞாயிறு அன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பஞ்சாப் பிரிவினைவாத அமைப்பு ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய தூதருக்கு மிரட்டல் விடுக்கும் நிலையிலும் போராட்டக்காரர்கள் பேசினர்.

இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதான்ட் படேல், கருத்து சுதந்திரத்திற்கு எப்போதும் தங்கமள் ஆதரவு உண்டு என்றார். அதே வேளையில் வன்முறையோ அல்லது மிரட்டல் விடுக்கும் வரையிலான போராட்டங்களையோ ஆதரிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக வேதான்ட் படேல் தெரிவித்துள்ளார்.   

Related Stories: