தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி யாருடைய கட்டளைப்படியும் செயல்படவில்லை

கவுகாத்தி: ‘தேர்தல் ஆணையம் யாருடைய கட்டளைக்கும் கீழ்பட்டு செயல்படவில்லை, எதிர்காலத்திலும் அப்படி இருக்காது’ என தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் கூறி உள்ளார். அசாமில் 126 சட்டப்பேரவை மற்றும் 14 மக்களவை தொகுதிகளின் எல்லை மறுவரையறை செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதில் அம்மாநிலத்தில் ஆளும் பாஜவின் உத்தரவுப்படி தேர்தல் குழு செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பான 3 நாள் ஆய்வுப்பணிகளுக்குப் பிறகு கவுகாத்தியில் நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் அளித்த பேட்டியில், ‘‘இது எங்களுக்கு புதிதல்ல. இதுபோன்ற வார்த்தைகளை நாங்கள் கேட்கத்தான் வேண்டும். எங்களுக்கு எதையும் கட்டளையிடுவது எப்போதும் சாத்தியமில்லை. நாங்கள் யாருடைய கட்டளைப்படியும் செயல்படவில்லை. ஒருபோதும் அப்படி செய்யவும் மாட்டோம்’’ என்றார்.

Related Stories: