ஒன்றிய அமைச்சர் மீது தாக்குதல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்கம் கூச் பெஹார் தொகுதி பாஜ எம்எல்ஏவான நிசித் பிரமாணிக், ஒன்றிய இணையமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் கூச் பெஹாரில் உள்ள பாஜ அலுவலகத்துக்கு கடந்த பிப்ரவரி 25ம் தேதி சென்றபோது கார்மீது கற்கள் வீசப்பட்டன.  இதுதொடர்பாக பாஜ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  மனுவை  விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஒன்றிய அமைச்சர் நிசித் பிரமாணிக் மீதான தாக்குதல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த நேற்று உத்தரவிட்டது.

Related Stories: