வழக்கறிஞர் கொலை வழக்கில் மாஜி எம்.பி ஆதிக் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

பிரயாக்ராஜ்:  வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரயாக்ராஜ்   சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாபியா கும்பல் தலைவனாக இருந்து பின்னர் அரசியல்வாதியாக மாறிய ஆதிக் அகமது.  கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆதிக் அகமது, அவரது தம்பி காலித் அசீம் என்ற அஷ்ரப்  உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ராஜு பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட வழக்கறிஞர் உமேஷ் பால்   கடந்த பிப்ரவரி 23ம் தேதி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.  இந்த வழக்கில், ஆதிக் அகமது குற்றவாளி என அறிவித்த நீதிபதி  ஆயுள் தண்டனையும்,ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அகமதுவின் சசோதரர் காலித் அசீம் உள்ளிட்ட 7 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: