புஜாராவை அவுட்டாக்குவது எளிதல்ல: ஹேசல்வுட் புகழாரம்

புதுடெல்லி: டெஸ்ட் போட்டிகளில் செதேஷ்வர் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்துவது சாதாரண விஷயமல்ல. பந்துவீச்சாளர்களுக்கு அது மிகப் பெரிய சவால் என்று ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் கூறியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே சமீபத்தில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில், புஜாரா 100 டெஸ்ட் என்ற சாதனை மைல்கல்லை எட்டினார். அவர் இதுவரை 102 டெஸ்டில் விளையாடி 7154 ரன் (அதிகம் 206*, சராசரி 43.88, சதம் 19, அரை சதம் 35) விளாசியுள்ளார். இந்த நிலையில், புஜாரா விக்கெட்டை வீழ்த்துவது சாதாடரன விஷயம் அல்ல என்று ஆஸி. வேகம் ஹேசல்வுட் கூறியுள்ளார்.

காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் ஹேசல்வுட் இது குறித்து கூறியதாவது: டெஸ்ட் போட்டிகளில் புஜாரா பேட் செய்யும் விதம் மிகச் சிறப்பாக உள்ளது. அவரை ஆட்டமிழக்கச் செய்வது பந்துவீச்சாளர்களுக்கு மிகப் பெரிய சவால் மட்டுமல்ல, அவரது விக்கெட் எங்களுக்கு கிடைக்கும் கவுரவம், கடின உழைப்புக்கான ஊதியம் என்றே சொல்லலாம். எனக்கும் அவருக்கும் இடையேயான போட்டி தனித்துவமானது. அதிலும், ஆஸ்திரேலிய மண்ணில் அந்த போட்டி மிகக் கடுமையாக இருக்கும். புஜாராவை நாங்கள் ‘வெறுக்க’ விரும்புகிறோம் என்பதே உண்மை. ஆனால், அவர் மிகச் சிறந்த வீரர் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

இவ்வாறு ஹேசல்வுட் கூறியுள்ளார்.

Related Stories: