அருங்காட்சியகத்தில் மெஸ்ஸி சிலை

உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு, தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு ‘கான்மிபோல்’ சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. உலக கால்பந்து அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் ஆளுமை என்பதை குறிக்கும் வகையில் கூட்டமைப்பின் தலைவர் அலெஜாண்ட்ரோ டொமிங்குஸ், மெஸ்ஸிக்கு செங்கோல், உலக கோப்பை மற்றும் கோபா அமெரிக்கா கோப்பைகளின் மாதிரிகளை வழங்கி வாழ்த்தினார். பராகுவே நாட்டின் லுக்யூ நகரில் உள்ள கான்மிபோல் தலைமையகத்தின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ள மெஸ்ஸியின் சிலையும் திறந்துவைக்கப்பட்டது. கால்பந்து உலகின் மகத்தான வீரர்களான பீலே (பிரேசில்), மரடோனா (அர்ஜென்டினா) ஆகியோரது சிலைகளுடன் மெஸ்ஸியின் சிலையும் அருங்காட்சியகத்தை அலங்கரிக்க உள்ளது.

Related Stories: