இமாச்சலில் முதன் முறையாக இரண்டரை மாத குழந்தைக்கு ‘எச்3என்2’ தொற்று பாதிப்பு

சிம்லா: நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பருவகால காய்ச்சல் எனப்படும் ‘ஆர்த்தோமிக்சோவிரிடே’ குடும்பத்தைச் சேர்ந்த இன்ஃப்ளூயன்ஸா ஏ, பி, சி, டி ஆகிய 4 வகைகளை சேர்ந்த சுவாச நோய் தொற்றுகளால் ஆபத்துகள் அதிகரித்து வருகிறது. இந்த வகைகளில், இன்ஃப்ளூயன்ஸா ஏ என்ற தொற்று மனிதர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் இமாச்சலப் பிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டம் டெஹ்ரா பகுதியைச் சேர்ந்த இரண்டரை மாத பெண் குழந்தைக்கு ‘எச்3என்2’ தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த குழந்தை தாண்டா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறது.  இதுகுறித்து கங்க்ரா டாக்டர் சுஷில் ஷர்மா கூறுகையில், ‘முதன் முறையாக இரண்டரை மாத குழந்தையை எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் பாதித்துள்ளது. அந்த குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: