திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ₹18 கோடி மதிப்பிலான 10 எலக்ட்ரிக் பஸ்கள் நன்கொடை-தனியார் நிறுவனம் வழங்கியது

திருமலை :  திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அறைகள் மற்றும் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்காக இலவசமாக தேவஸ்தானம் பஸ்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் டீசல் பஸ்சுக்கு மாற்றாக எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.

இதற்காக  தேவஸ்தானத்திற்கு 10 எலக்ட்ரிக் பேருந்துகளை தனியார் இன்ஜினியரிங் நிறுவனத்தினர் நன்கொடையாக நேற்று வழங்கினார். இதனை திருமலையில் உள்ள ராம்பகிஜா பக்தர்கள் ஓய்வறை   அருகே வரிசையாக நிறுத்தி அறங்காவலர் குழு தலைவர் சுப்பா தலைமையில் சிறப்பு பூஜைகள் ெசய்யப்பட்டது. பின்னர் செய்தியாளரிடம் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா கூறியதாவது:  உலக பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமான ஏழுமலையான் கோயிலில்  சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதற்காக ஏற்கனவே பிளாஸ்டிக் பைகள் மற்றும் வாட்டர் பாட்டில்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக டீசல் வாகனங்களுக்கு மாற்றாக  எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.  கடந்த ஒரு ஆண்டாக தேவஸ்தான பணியாளர்கள் பயன்படுத்தி வந்த 36 டீசல் வாகனங்களுக்கு மாற்றாக  எலக்ட்ரிக் கார்கள் புதிதாக வாங்கி  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வரும் பக்தர்களுக்காக 250 முதல் 300 டீசல் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந நிலையில் அந்த இடத்தில் கடந்த ஆண்டு முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவின்படி  தற்போது 65 எலக்ட்ரிக் பேருந்துகள் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.

ஒரு நாளைக்கு ஐந்து ட்ரிப்புகள் வீதம் இந்த பஸ்கள் திருப்பதி திருமலை இடையே இயக்கப்படுகிறது. அதேபோன்று பக்தர்களின் வசதிக்காக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு திருமலையில் செல்வதற்கு தேவஸ்தானம் சார்பில் டீசல் பஸ்கள் ‘தர்மரதம்’ என்ற பெயரில் இலவசமாக பக்தர்களை அழைத்து சென்று வருகிறது. அந்த பேருந்துகளை தனியார் இன்ஜினியரிங் நிறுவனத்திடம் நன்கொடையாக வழங்கும்படி கேட்டுக் கொண்டோம்.

அவர்களும் அதனை ஏற்று  ₹1.80 கோடி மதிப்புள்ள  10 பேருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர். சுமார் ₹18 கோடி மதிப்புள்ள இந்த 10 பேருந்துகள் இன்னும் பத்து நாட்களுக்குள் பக்தர்களின் பயன்பாட்டுக்காக இலவசமாக திருமலையில் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: