இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

இஸ்ரேல்: இஸ்ரேல் நாட்டில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு கொண்டுவரவுள்ள சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இஸ்ரேலில் புதிய சட்டம் அமலாகும் பட்சத்தில் நீதித்துறையின் அதிகாரம் குறையும். நீதித்துறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்தி அரசுக்கும், நீதித்துறைக்கு சம அதிகாரம் என்ற நிலை வரும். மேலும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறவும் இஸ்ரேல் அரசுக்கு அதிகாரம் வழங்கப்படும். அதேபோல் நீதிபதிகள் நியமனத்திலும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்படும்.

இது நீதித்துறையை முடக்கும் செயல் என கூறி இஸ்ரேலில் கடுமையான எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன. ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பித்துக்கொள்ளவே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதிய சட்டம் கொண்டு வருவதாக கூறி பொதுமக்கள் லட்சக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: