டெல்லி: மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ராகுல் காந்தி கடந்த 2004 பொதுத் தேர்தலில் உபியின் அமேதி தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆனதைத் தொடர்ந்து, 2005ம் ஆண்டு முதல் அவருக்கு ஒதுக்கப்பட்ட எண் 12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இதனிடையே பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு பேசியதாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. சிறை தண்டனையை அடுத்து தற்போது ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் ஏப்ரல் 22ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யுமாறு மக்களவை வீட்டு வசதிக் குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.