குட்கா மேல்முறையீட்டு வழக்கு ஏப்.14க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி:  தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை சென்னை ஐேகார்ட் ரத்து செய்தது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான  அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை ஒத்திவைக்க கோரி புகையிலை நிறுவனங்கள் தரப்பில் ஏற்கனவே கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதால் வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்க வைக்கப்பட்டது இதையடுத்து வழக்கு ஏப்ரல் 14 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: