134 நாட்களுக்கு பிறகு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 134 நாட்களுக்கு பிறகு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி பாசிட்டிவ் சதவீதம் 3.19 ஆகவும், வார பாசிட்டிவ் சதவீதம் 1.39ஆகவும் உள்ளது. நேற்று புதியதாக 1805 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் சண்டிகர், குஜராத், இமாச்சல், உபி ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும், கேரளாவில் 2 பேரும் என நேற்று மட்டும் 6 பேர் தொற்றால் பலியாகி விட்டனர்.  இதனால் கொரோனா ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 5,30,837ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.47 கோடியை எட்டியுள்ளது. 134 நாட்களுக்கு பிறகு சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று நிலவரப்படி நாடு முழுவதும் 10,300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: