ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!

சென்னை: மின்சார கட்டணத்தை மாற்றியமைக்காவிட்டால் கடன் வழங்கப்படாது என்ற அழுத்தம் காரணமாகவே, கட்டணம் உயர்த்தப்பட்டது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீது 3ம் நாள் விவாதம் இன்று நடந்தது. அப்போது மின்சார கட்டணம் உயர்வு தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ. தங்கமணி கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி; கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 84% அளவுக்கு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது.

தற்போது ஒரு கோடி மக்களுக்கு 0% என்ற நிலையிலேயே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தை மாற்றியமைக்காவிட்டால் கடன் வழங்கப்படாது என்ற அழுத்தம் காரணமாகவே, கட்டணம் உயர்த்தப்பட்டது. கோடைக்காலத்தில் எந்த விதமான மின் பாதிப்பும் ஏற்படாத வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். மின் உற்பத்தியை பெருக்க கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தற்போது உள்ள 18 மணி நேர மும்முனை மின்சாரம், வருங்காலத்தில் 24 மணி நேரமாக்க நடவடிக்கை மேற்கொள்வோம். மலைப்பகுதியில் இருக்கும் உயர்கம்பிகளை, புதைவட கம்பியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பவானிசாகர் தொகுதி, ஆச்சனூரில் துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, 89,000 மின் கம்பங்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது எனவும் கூறினார்.

Related Stories: