விபத்து ஏற்படுத்திய வழக்கில் யாஷிகா ஆனந்த் மீதான பிடிவாரண்டை தளர்த்தியது செங்கல்பட்டு நீதிமன்றம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஒருங்கிணைத்த நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் 25ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆஜரான நிலையில் நடிகை யாஷிகா மீதான பிடிவாரண்டை தளர்த்தியது செங்கல்பட்டு நீதிமன்றம்.

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி நள்ளிரவு காரில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது கார் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் காரில் பயணித்த யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று சில மாதங்களுக்கு பிறகு வீடும் திரும்பினார்.

இந்த விபத்து தொடர்பாக மகாபலிபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து இவ்வழக்கு விசாரணைக்காக யாஷிகா ஆனந்த் மார்ச் மாதம் 22ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அவர் ஆஜர் ஆகவில்லை.  

எனவே கடந்த மார்ச் 23ம் தேதி யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் யாஷிகா ஆஜரானார். பிடிவாரண்டை ரத்து செய்ய கோரி அவர் ஆஜர் ஆகியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஆஜரானதையடுத்து யாஷிகா ஆனந்த் மீதான பிடிவாரண்டை செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

Related Stories: