புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு மீண்டும் உணவு பொருட்கள் விநியோகிக்கப்படும்: பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி விநியோகிக்கப்படும் என பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் மானிய விலையில் வழங்கப்படும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 5 மாத கால சம்பளம் வழங்கப்படும். காங். ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 716 ஊழியர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவர். வீடு கட்டுவதற்காக கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கியவர்களின் வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என ரங்கசாமி அறிவித்திருக்கிறார்.

Related Stories: